ஒரு மிட்டாய் உங்கள் வாழ்க்கை பாதையை மாற்றுமா..?

மாற்றும் என்கிறார்கள் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான பார்த்திபனும் பாஸ்கரும். http://bit.ly/2fLV6oy

ஒரு கார்ட்டூன் தேவைக்காக இரு தினங்களுக்கு முன் பாஸ்கர் என்னை தொடர்பு கொண்டார். உரையாடலின்போதுதான் எதேச்சையாக மிட்டாய் அவர்களின் வாழ்க்கை பயணத்தை மாற்றிய கதையை சொன்னார்.

அது இனி உங்களுக்காக..

அண்ணன் தம்பிகள் இருவரும் படித்தது இன்ஜினியரிங்.. அண்ணன் பார்த்திபனுக்கு அமெரிக்காவில் ஐடி கம்பெனியில் வேலை. தம்பி பாஸ்கரனுக்கு சென்னை ஐடி கம்பெனியில் வேலை. மகிழ்ச்சியாக போய் கொண்டிருந்தது வாழ்வு.

ஒருநாள் சும்மா பேசிக்கொண்டிருக்கும்போது சிறுவயதில் சாப்பிட்ட ஜவ்வு மிட்டாய், இலந்த வடை, தேன் மிட்டாய்.. திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு என்று நம் பாரம்பரிய தின்பண்டங்களின் பட்டியல் நீண்டுக்கொண்டு போகிறது.

“ஆமா.. அந்த பண்டங்கள் எல்லாம் இப்போ கிடைக்குமா.. எப்படி கிடைக்கும்.. எங்கு கிடைக்கும்.. நம் பிள்ளைகளுக்கு அந்த பண்டங்கள் பற்றி தெரியாமலே போய்விடுமா என்று கேள்வி எழுகிறது.. http://bit.ly/2fLV6oy

அப்போதுதான் சகோதரர்களுக்கு அந்த ஐடியா வருகிறது.. “நம் மரபு பண்டங்களை நாமே மீட்டெடுக்கும் பணியைச் செய்தால் என்ன’ என்று.

உடனடியாக களத்தில் இறங்குகிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் பெயர் பெற்ற தின்பண்டங்களை வாங்கி விற்பதற்கென்று www.nativespecial.com என்று ஒரு இணையதளத்தை உருவாக்கினார்கள்.

“ஐடி வேலையை விட்டுவிட்டு இப்படி மரபு பண்டங்களை விற்க போகிறோம் என்கிறார்களே..” என்று வீட்டில் யாரும் புலம்பவில்லை. துணை நின்றார்கள்.

இவர்களைப்போலவே உலகம் முழுக்க நம் பாரம்பரிய தின்பண்டங்களுக்காக ஏங்கியவர்கள் இன்று இவர்களின் வாடிக்கையாளர்கள். நம்மூர் அல்வாவும், தேன் மிட்டாயும், மணப்பாறை முறுக்கும் இப்போது விமானத்தில் பறக்கின்றன.

இப்படி இவர்களின் மரபு உணவு பண்டங்களை மீட்டெடுக்கும் வேலையில் இறங்கிப்பின்னரே பல பண்டங்கள் இன்று செய்வதற்கு ஆளில்லாமல் காணமல் போனதை அறிகிறார்கள். அவற்றை எல்லாம் மீட்டெடுத்து அதன் மூலம் அதை செய்பவர்களுக்கும் ஒரு வர்த்தக வருவாயை உருவாக்கும் திட்டம் வைத்திருக்கிறார்கள்.

வெறும் நாலு சிப்ஸ்.. நிறைய காத்து.. கலர்புல்லா ஒரு பேக்கிங்கை வச்சு பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை ஏமாத்திக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல்.. நமக்கு நோய்களையும் பரிசளிக்கும் சூழலில்,

மரபு உணவு பண்டங்களை மீட்டெடுக்கும் இந்த சகோதரர்களின் பணி பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்.

நம்ம ஊர் பண்டம் தேவைப்படுபவர்கள் 9884813398
இந்த எண்ணில் பாஸ்கரை தொடர்பு கொள்ளலாம்.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *