www.linesmedia.in ஒரு சுதந்திரமான ஊடகம்.

போர்களில் மிக முக்கியமான ஊடகப்போர் தந்திரம் குறித்து அறியாத தமிழர்களுக்காகவும், உலகம் முழுக்க ஒடுக்குமுறைக்குள்ளாகும் எளிய மனிதர்களுக்காகவும் கோடுகளின் வழியாகவும் எழுத்துகளின் வழியாகவும் அவர்களின் நியாயங்களை பேசுவதே எங்களின் அடிப்படை நோக்கம்.

குமுதம் வார இதழில் 12 ஆண்டுகள் கார்ட்டூனிஸ்ட்டாகவும், சிறப்புச் செய்தியாளனாகவும் பணிபுரிந்த அனுபவத்தில் லைன்ஸ்மீடியா தலைமை பங்கேற்பாளனாக நான் பயணிக்கிறேன். என்னுடன் சில ஊடக நண்பர்களும் இருக்கிறார்கள்.

அண்ணா அறிவாலயத்திலும் போயஸ்தோட்டத்திலும் கமலாலயத்தில் மண்டியிட்டு கிடக்கும் தமிழக ஊடக சூழலுக்கு நடுவில் சுதந்திரமான எங்கள் ஊடகப்பயணம் என்பது நிச்சயமாக வாசக நண்பர்களான உங்களின் துணை இல்லாமல் சாத்தியமாகாது.

உங்கள் படைப்புகளையும் editorlinesmedia@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு அனுப்பலாம். எங்கள் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்பும் நண்பர்கள் advtlinesmedia@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

அத்துடன் ஊடகப்போரை தொடர்ந்து நடத்த வேண்டுமானல் அதற்கு பொருளாதாரம் மிக முக்கியமானது. லைன்ஸ் மீடியா எந்த ஒரு தனி முதலாளியின் பின்புலத்திலும் நடத்தப்படவில்லை என்பதால் எங்கள் பயணத்தில் வாசகர்களாகிய நீங்களும் துணை நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

எங்கள் கோடுகளும் எழுத்துகளும் பேசுவது நியாயம் என்று நீங்கள் நம்பினால் எங்கள் பயணத்தில் நீங்களும் பங்களிப்பாளர்களாக ஒவ்வொரு மாதமும் நீங்கள் விரும்பும் தொகையை எங்களுக்கு அனுப்பவும் என்று உரிமையுடன் கோரிக்கை வைக்கிறோம்.

புள்ளியிலிருந்து ஆரம்பிக்கும் எங்கள் பயணம் கோடுகளாக தொடர நீங்களும் துணை வருவீர்கள் என்று நம்புகிறோம்.

என்றும் நன்றியுடன்
கார்ட்டூனிஸ்ட் பாலா
மற்றும்
லைன்ஸ் மீடியா ஆசிரியர் குழு

இது எங்கள் நிறுவனத்தின் வங்கி கணக்கு எண்.
LINES MEDIA
C/A : 6499827223
INDIAN BANK
BRANCH : PORUR
IFSC: IDIB000P047