தயங்கித் தயங்கி நுழையும் இடங்களில் என்னோடு முதல் புன்னகையைப் பகிர்ந்துகொள்பவர்களை எனக்குப் பிடித்துவிடும். டிஸ்கவரியில் நடக்கும் கூட்டங்களுக்கு பார்வையாளனாகச் செல்லும்போது அப்படித்தான் ஜீவகரிகாலனைத் தெரியும். பெரும்பாலும் ஒரு நிகழ்ச்சியின் தயக்கமான தொகுப்பாளராகவும், வரவேற்புரையிலும், நன்றியுரையிலும்